குமரி மாவட்ட கிராம நிர்வாக அதிகாரியின் முகத்தில் கடித்து குதறிய தேங்காய் திருடன்!

குமரி மாவட்ட கிராம நிர்வாக அதிகாரியின் முகத்தில் கடித்து குதறிய தேங்காய் திருடன்!

in News / Local

கிராம நிர்வாகி செந்தில் கார்த்திகேயன் கூறுகையில் போலீசார் ஒரு பட்சமாக செயல்படுவதாகவும் என் போன்ற அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கொரோனா காலத்தில் தீவிர பணியில் ஈடுப்பட்டு வந்த அரசு ஊழியரை ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கண்டிக்காமல் என்னை சமூக விரோதியாக பார்ப்பதாக வேதனை தெரிவித்து நீதி கேட்டு மருத்துவமனையில் இருந்தப்படியே கண்ணீர்மல்க வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகார்கோவில் அருகே தனது தோட்டத்தில் திருடவந்தவர்களை பிடிக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் கிராம அதிகாரி .செந்தில் கார்த்திகேயன் மருத்துவமனையில் அனுமதி கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி ஓட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே குருக்கள் மடத்தை சேர்ந்த செந்தில்கார்த்திகேயன் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார், இவர் வழக்கம் போல் நேற்று இரவு அலுவலகத்தில் பணியை முடிந்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த போது, தன் ஊரில் தன் சொந்த தோப்பில் அத்துமீறி திருட்டு தனமாக மரத்தில் இருந்து தேங்காய் பரித்துக்கொண்டு இருந்த கும்பலை பிடிக்க தோப்பிற்குள் சென்ற போது எதிர்பாராதவிதமாக தேங்காய் திருடர்கள் அவரின் முகத்தில் கடித்து கொதரி கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைகாக நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர். இச் சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரியை தாக்கி விட்டு தேங்காய் திருடர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து செந்தில் கார்த்திகேயன் கூறுகையில் போலீசார் ஒரு பட்சமாக செயல்படுவதாகவும் என் போன்ற அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கொரோனா காலத்தில் தீவிர பணியில் ஈடுப்பட்டு வந்த அரசு ஊழியரை ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கண்டிக்காமல் என்னை சமூக விரோதியாக பார்ப்பதாக வேதனை தெரிவித்து நீதி கேட்டு மருத்துவமனையில் இருந்தப்படியே கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top