தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை

in News / Local

துப்பாக்கி (Country made open barrel 9mm Pistol), 5 குண்டுகள் (Rounds) 2 அரிவாள் ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் பல கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வெடிகுண்டு உட்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி 3 பேர் கைது- கைது செய்த போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

இன்று (16.07.2020) அதிகாலை 01.00 மணிக்கு தொட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடியில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஈரோட்டிலிருந்து தச்சநல்லூர் செல்லும் பஜீரோ (Bajero TN 57 AH 333) காரை சோதனை செய்ததில், அந்த காரில் திருநெல்வேலி தச்சநல்லூர் மேலக்கரை, அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் (1) ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார் (வயது 37). இவருடன் (2) பாளையங்கோட்டை படமகுறிச்சியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் (26) மற்றும் கொக்கிரக்குளம் மேலநத்தத்தை சேர்ந்த சுரேந்தர் (24) ஆகிய மூவர் இருந்தனர்.

இவர்கள் கடந்த 13.07.2020 அன்று இ-பாஸ் பெற்றுக்கொண்டு தச்சநல்லூரிலிருந்து ஈடுரோடு சென்றதும், அங்கிருந்து திரும்பி வருவதும் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார் இடுப்பில் கைத்துப்பாக்கி (Country made open barrel 9mm Pistol ), 5 குண்டுகள் (Rounds) வைத்திருந்ததும், அவருடன் இருந்த மற்ற இருவரிடம் 2 அரிவாள் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. பின் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ஒரு துப்பாக்கி, 5 குண்டுகள், 2 அரிவாள்கள், 5 செல்போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் ஆகியவற்றை கோவில்பட்டி போலீசார் கைப்பற்றினர்.

ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார் என்பவர் மீது (1) மதுரை மதிச்சியம் காவல் நிலையம், (2) திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலையம், (3) புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலையம், (4) திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலையம், (5) சென்னை பெருநகரம் கிண்டி காவல் நிலையம், (6) ஈரோடு டவுன் காவல் நிலையம், (7) திருநெல்வேலி மாநகரம் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையம் ஆகிய 7 காவல் நிலையங்களில் 7 கொலை வழக்குகள் உள்ளன.

மேலும் (1) சென்னை பெருநகரம்-பல்லாவரம் காவல் நிலையம் 4 வழக்குள் (2) திருநெல்வேலி தாலுகா காவல் நிலையம், (3) திருநெல்வேலி பேட்டை, (4) மதுரை அண்ணாநகர் காவல் நிலையம் (5) திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலையம் 8 வழக்குகள், (6) திருநெல்வேலி மானூர் காவல் நிலையம், (7) சென்னை பெருநகரம்-சங்கர் நகர் காவல் நிலையம், (8) திருநெல்வேலி டவுன் காவல் நிலையம் மற்றும் (9) பாளையங்கோட்டை காவல் நிலையம் ஆகிய 9 காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அரிவாளால் மிரட்டி கொள்ளையடித்தல், அடாவடி செய்து ரவுடித்தனம் செய்தல், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் போன்ற 19 வழக்குகள் இவர் மீது உள்ளன.

மொத்தம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 26 வழக்குகளில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களை கைது செய்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாரின் இந்த செயலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top