சபரிமலை பிரச்சனை காரணமாக தோவாளை பூ விற்பனை சரிந்தது

சபரிமலை பிரச்சனை காரணமாக தோவாளை பூ விற்பனை சரிந்தது

in News / Local

கேரளாவில் சபரிமலை கோயில் பிரச்சனை காரணமாக ஐயப்ப பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டதால், தோவாளை மலர் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகளவு காணப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐயப்ப பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பூக்களை வாங்குபவர்களின் வரத்தும் குறைந்து விட்டதால், பூக்களின் விலை சரிந்து விட்டது. கடந்த 5 நாட்களாக பூ வியாபாரமே இல்லை என தோவாளை பூ வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

சபரிமலை பிரச்சனையால் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த வருடம் 200 ரு்பாய்க்கு விற்ற பூக்கள், தற்போது 120 ரூபாய்க்கு விற்படுகிறது. அதே போல கடந்த வருடம் ரூபாய் 1100-க்கு விற்கப்பட்ட பிச்சி பூக்கள் தற்போது ரூபாய் 700-க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் வியாபாரம் களை கட்டாமல் மந்தமாகவே இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் கேரளாவில் நடைபெறும் போராட்டங்கள் காரணமாகவே ஐயப்ப பக்தர்களின் வருகை குறைந்துவிட்டது என்றும்., இதனால் தான் தோவாளை மலர்சந்தைக்கு பூக்கள் வாங்க வெளியூர் வியாபாரிகள் வரவில்லை என கூறப்படுகிறது. உள்ளூர் வியாபாரமும் மந்தமாகிவிட்டதால் பூக்களின் விலை சரிந்து விட்டதாக தோவாளை சந்தை வியாபாரிகள் வேதனையோடு காணபடுகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top