இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்த முடிவை அறிவிப்பதை கேட்டு கொண்டாடத்திற்கு காத்திருந்த குமரிமாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.

இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்த முடிவை அறிவிப்பதை கேட்டு கொண்டாடத்திற்கு காத்திருந்த குமரிமாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.

in News / Local

அரசியலில் குதித்தார் நடிகர் ரஜினகாந்த்.. கட்சிக்கும் ஆட்சிக்கும் தனி தனி தலைமை என்றும் நான் கட்சி மட்டுமே தலைவராக இருக்க விரும்புகிறேன் தெரிவித்தார்..
முதலமைச்சர் நாற்காலி ஆசை எனக்கு இல்லை அதை ஒரு போதும் நான் நினைத்தது கூட இல்லை என்று உறுதியாக தெரிவித்தார்..
மேலும் தனது வயது காரணமான கிண்டல் வினாவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்....

ரஜினியின் பரபரப்பான இந்த கருத்தால் ரஜினி மக்கள் மன்றத்தினர் மனம் வாடிவிட்டதாக ரஜினி ரசிகர்கள் பலர் தெரிவித்த நிலையிலும் கூட பொதுமக்கள் ரஜினியின் சிஸ்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்...

இது பற்றி குமரிமாவட்ட மாநகர செயலாளர்.ரஜினி செல்வம் கூறியதாவது..

எங்கள் தலைவர் அறிவித்த புதிய முறையை வரவேற்கிறோம்..2017 ல் நாங்கள் அவரது முடிவுக்கு முன்மொழிந்து விட்டோம்!
தலைவர் ரஜினி சொன்னதை கேட்டு நடக்க தயாராகி விட்டோம்.
பதவிக்கு ஆசைப்படாமல் ஒரு மாற்று அரசியலை முன்மொழிந்துள்ளார்.இது மக்களுக்கு லட்ச லாவண்யா இல்லாமல் திட்டங்கள் நேரடியாக போய்சேர எங்கள் போன்ற ரசிகர்களை காவலர்களாகவும், ரஜினி தலைமை காவலராகவும் இருப்பதாக தெரிவிப்பதோடும் இது மூலமா மாற்று அரசியல் வருவதை நாங்கள் அனைவரும் வரவேற்கிறோம் என்று நாகர்கோவிலில் தெரிவித்தார்....

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top