நாகர்கோவிலில், நாளை மின்தடை!

நாகர்கோவிலில், நாளை மின்தடை!

in News / Local

நாகர்கோவில், மின்பகிர்மான கழக செயற்பொறியாளர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகர்கோவில் உபமின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகளுக்காக 26ம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதனால் நாகர்கோவில் உபமின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் வடசேரி, ஆசாரிபள்ளம், வல்லன்குமாரன்விளை மற்றும் தடிக்காரன்கோணம் உபமின் நிலையங்களிலும், அதனை சார்ந்த பகுதிகளிலும் மற்றும் நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், பெருவிளை, சுங்கான்கடை, வட சேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட் ரோடு, கே.பி. ரோடு, பால்பண்ணை , நேசமணிநகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top