நாட்டிற்காக தூக்கு கயிற்றை முத்தமிட்ட இந்திய விடுதலை போராட்ட வீரரும், போர்க்கலை வித்தகருமான கட்டுதடிக்காரன் கொங்கு குணாளன் நாடாரின் 215-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க தலைவர் சுரேந்திரகுமார், பனங்காட்டு கடை கட்சி மாநில ஆலோசகர் பால சிவனேசன், நாடார் மக்கள் மன்ற குமரி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார்,
தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்க நிறுவன தலைவர் ரெஜிசிங், அகில இந்திய கராத்தே செல்வின் நாடார் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் டி.ஜே.வி. மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்.
0 Comments