வெள்ளிச்சந்தை அருகே இருவர் தற்கொலை!

வெள்ளிச்சந்தை அருகே இருவர் தற்கொலை!

in News / Local

வெள்ளிச்சந்தை அருகே மேற்கு சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கிருஷ்ண பிரசாத் (40). இவர் வெள்ளிச்சந்தை நிலவடி குளத்தின் அருகே பழக்கடை நடத்தி வந்தார். கடந்த ஐந்து மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் மேலும் பணம் முதலீடு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையை சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்த கிருஷ்ண பிரசாத்தை வீட்டிலுள்ளவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்து போனார். இதுகுறித்து அவரது அண்ணன் மணிகண்ட பிரசாத் வெள்ளிச்சந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிச்சந்தை அருகே பரப்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வதாஸ் மகன் அர்ஜுன்(23). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஊருக்கு வந்தவர் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்தார். இவரது தாயார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அர்ஜுன் நேற்று முன்தினம் மாடி அறையில் உள்ள மின்விசிறியில் லுங்கியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அண்ணண் அருண் வெள்ளிச்சந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top