கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே ஒரு இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்து வந்ததால் இரண்டு காதலர்களும் கட்டிப் பிடித்து உருண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கன்னியாகுமரி அருகே குளச்சல் அருகே இளம் பெண் ஒருவர் பேருந்து நிலையத்தில் பரிசு பொருட்கள் கடை வைத்துள்ள ஒரு இளைஞரை காதலித்து உள்ளார். முதலில் நட்பாக பழகிய இருவரும் அதன் பின்னர் தீவிரமாக காதலித்துள்ளனர். காதலிக்காக அந்த இளைஞர் அதிக பணம் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென அந்தப் பெண் பரிசுப்பொருள் கடை வைத்துள்ள இளைஞரை தவிர்த்து விட்டு இன்னொரு இளைஞனுடன் சுற்றி இருப்பதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரிசுப்பொருள் கடை வைத்துள்ள இளைஞர் அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்றபோது அந்த பெண் வேறு ஒரு புதிய காதலனுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
உடனே தான் செலவழித்த பணம் முழுவதையும் கொடுக்குமாறு அவர் சண்டையிட்டார் அப்போது புதிய காதலனுக்கும் இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அதன் பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து உருண்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு இளைஞர்களையும் இளம் பெண்ணையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை அந்த இளம்பெண் காதலிப்பது தெரியவந்தது
இதனை அடுத்து புதிய காதலர் இந்த இளம் பெண்ணுக்கும் தனக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். தற்போது பரிசுப்பொருள் கடை வைத்திருக்கும் இளைஞருக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
0 Comments