நீட் ஆள் மாறாட்ட வழக்கு: மாணவர் உதித் சூர்யாவிற்கு ஜாமீன்!

நீட் ஆள் மாறாட்ட வழக்கு: மாணவர் உதித் சூர்யாவிற்கு ஜாமீன்!

in News / Local

சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை கைது செய்தனர்.

முன்னதாக உதித்சூர்யா தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் கைது செய்யப்பட்டதால், அவரது முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக மாற்றி விசாரிக்கப்படும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மாணவர் உதித்சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக தினசரி காலை 10.30 மணிக்கு உதித்சூர்யா ஆஜராக நிபந்தனை விதித்தார். உதித்சூர்யாவின் வயதையும் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

நீட் ஆள்மாறாட்ட வழக்கை பார்க்கும்போது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருந்து திட்டம் கிடைத்ததுபோல் உள்ளது என நீதிபதி கூறி உள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top