கந்துவட்டி கொடுமையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை!

கந்துவட்டி கொடுமையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை!

in News / Local

நாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் வடசேரி வஞ்சிமார்த்தாண்டம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). தொழில் அதிபர். இவர் வடசேரி-புத்தேரி சாலையில் பிஸ்கட், சிகரெட் மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தார்.

இவரது வீடு 3 மாடி கொண்ட பங்களா வீடு ஆகும். இங்கு சுப்பிரமணி, அவரது தாயார் ருக்மணி (72), மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20) ஆகியோர் வசித்து வந்தனர். சுப்பிரமணியின் மகள் ஷிவானி, ஹோமியோ டாக்டருக்கு படித்து வந்தார்.

வழக்கமாக சுப்பிரமணி காலையிலேயே கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கி விடுவார். இன்று காலை நீண்டநேரமாகியும் அவர் கடையை திறக்க செல்லாததால் . கடையில் வேலைபார்க்கும் ஊழியர் அவரை தேடி வீட்டுக்கு வந்தார். கதவை பலமுறை தடியும் யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர் சுப்பிரமணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து எடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த அறையில் 4 குளிர்பான டப்பாக்கள் இருந்தன. அதன் அருகில் வெள்ளை நிறத்தில் ஒரு பொடி பாக்கெட்டும் கிடந்தது.வீட்டு படுக்கையறையில் சுப்பிரமணி, ருக்மணி, ஹேமா, ஷிவானி ஆகிய 4 பேரும் வாயில் நுரைதள்ளியபடி பிணமாக கிடந்தனர். இரவில் அவர்கள் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 4 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top