குலசேகரம் அருகே தையல் பயிற்சிக்கு சென்ற சிறுமியை கடத்திச் சென்ற வேன் டிரைவர்

குலசேகரம் அருகே தையல் பயிற்சிக்கு சென்ற சிறுமியை கடத்திச் சென்ற வேன் டிரைவர்

in News / Local

குலசேகரம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். அவ்வாறு தையல் பயிற்சிக்கு சென்றபோது சிறுமிக்கும், குலசேகரம் கான்வெண்ட் சந்திப்பு சுண்ணாம்பு விளையை சேர்ந்த வேன் டிரைவர் எட்வின் (வயது 23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி தையல் பயிற்சிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவள் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தங்களுடைய மகளை பல இடங்களில் தேடினர். எனினும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர், இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது, சிறுமியை எட்வின் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திச் சென்ற வேன் டிரைவர் எட்வினை வலைவீசி தேடி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top