தக்கலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்!

தக்கலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்!

in News / Local

தக்கலை அருகே கூட்டமாவு ஆள்குளம் பகுதியில் டாஸ்மாக் கடை ஓன்று நேற்று மதியம் 12 மணிக்கு திடீரென திறக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியது. இதையடுத்து, சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் டாஸ்மாக் கடைக்கு முன் ஓன்று திரண்டனர். பின்னர், அவர்கள் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம், கோவில்கள் உள்ளன. மதுக்கடையால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, கடையை அகற்ற வேண்டும் என்று கூறினர்.

அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் படி கூறினார். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top