பேரிஜம் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்த நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு!

பேரிஜம் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்த நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு!

in News / Local

சுற்றுலா தலமான கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி புகழ் பெற்றது. இங்கு உள்ள லட்சக்கணக்கான மரங்களுடன் இந்த ஏரியும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. இங்கு செல்வதற்கு வனத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும்.

இந்த ஏரியில் இருந்துதான் பெரியகுளம் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கொடைக்கானலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரிஜம் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்ததால் நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட 4 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 18ம் தேதி முதல் சமூக வலைத்தளங்களில் நடிகர் சூரி, விமல் ஆகியோர் பேரிஜம் ஏரியில் மீன் பிடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பேரிஜம் ஏரியில் அத்துமீறி நுழைந்து நடிகர் சூரி, விமல் மற்றும் இவர்களுடன் இருந்த சில நண்பர்கள் மீன் பிடித்ததாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையினர் ரூபாய் 2000 அபராதம் விதித்துள்ளதாகவும் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து பல்வேறு சோதனை சாவடியை கடந்து எவ்வாறு இவர்கள் கொடைக்கானலுக்கு வருகை தந்தார்கள் என்பது குறித்து வன அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top