கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது

கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது

in News / Local

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் கோடை கால சீசனில் சுற்றுலா பயணிகளின் வரத்து மிக அதிகமாக காணப்படும். இந்நேரங்களில் இங்கு வியாபாரமும் களைகட்டும். கன்னியாகுமரியில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது. இந்த காலகட்டத்தில் சபரிமலை செல்லும் மற்றும் தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் சீசன் களை கட்டும். மேலும் சுற்றுலா பயணிகளின் வரத்தும் மிக அதிகமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் ஐயப்ப பக்தர்களின் தலைகளாகவே காட்சியளிக்கும்.

ஆனால் தற்போது கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. வடநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் குறைந்த அளவிலான ஐயப்ப பக்தர்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். சபரிமலையில் இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. மேலும் சபரிமலை விவகாரம் தொடர்பாக தற்போது பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகின்றன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top