நாகர்கோவிலில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி!

நாகர்கோவிலில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி!

in News / Local

நாகர்கோவிலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியசைத்து தொடங்கி வைக்க இந்த பேரணி கார்மல் பள்ளியில் இருந்து புறப்பட்டது.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவ-மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர். ராமன்புதுார், செட்டிகுளம் வழியாக சென்ற பேரணி இந்து கல்லூரியை சென்றடைந்தது.

அங்கு வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சான்றிதழ், 18 வயது பூர்த்தி அடைந்த 16 புதிய வாக்காளர்களுக்கு புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி வாழ்த்தி பேசினார். நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் வரவேற்றார். உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதிக் தயாள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராஐ், இந்துக் கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு, கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top