தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்?திக் திக் நிமிடங்கள் தொடங்கியது - நாகரில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்?திக் திக் நிமிடங்கள் தொடங்கியது - நாகரில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!

in News / Local

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற திக் திக் நிமிடங்கள் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் நடைப்பெறுவதால் முடிவு தாமதமாக வெளியாக வாய்ப்புள்ளது .எனவே தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மேஜையில் அமைத்து வாக்கு எண்ணிக்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்தது.தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு எந்திரங்கள் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் கொரோனா காரணமாக வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் மட்டும் தான் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கை முடிவு தாமதமாக வெளியாக வாய்ப்புள்ளது. தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மேஜையில் அமைத்து வாக்கு எண்ணிக்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் தொகுதியை சேர்த்து 231 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் நாடாளுமன்ற தொகுதிக்கு பதிவான வாக்குகளை சட்டசபை தொகுதி வாரியாக எண்ணுவதற்கு 84 மேஜைகளும்,தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 6 மேஜைகளும்,ராணுவ வீரர்கள்,துணை ராணுவ வீரர்கள் பதிவு செய்த தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 25 மேஜைகள் என 115 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் 6 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் சேர்த்து 231 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியை சட்டமன்றத் தொகுதிக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை 30 சுற்றுலாவும் மற்ற தொகுதிகளில் 26 சுற்றுக்கள் முதல் 28 சுற்றுக்கள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top