நாகர்கோவிலில் கணவன் இறந்த சோகத்தில் மனைவி, இரண்டு மகள்கள் உட்பட மூன்று பேர்  தற்கொலை

நாகர்கோவிலில் கணவன் இறந்த சோகத்தில் மனைவி, இரண்டு மகள்கள் உட்பட மூன்று பேர் தற்கொலை

in News / Local

குமரிமாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியை சேர்ந்த ராசி(29) பெண் கணவன் இறந்த துக்கத்தில் ஒரு வருடம் கழித்து தனது இரு குழந்தைகளையும் கொன்று தாய் ராசி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராசியின் கணவர் ரஞ்சித் (32) கடந்த ஆண்டு உடல் நலம் சரியில்லாமல் இறந்துள்ளார் .இந்த நிலையில் கணவர் இறந்த சோகத்தில் இருந்து வந்துள்ள ராசி கணவரின் ஒன்றாம் ஆண்டு நினைவு நாளை அனுசரித்து விட்டு கணவரின் நினைவாகவே இருந்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு தூக்க மாத்திரையை தனது அக்சயா 5,அனியா 3 1/2 ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து கொன்று விட்டு தானும் தூக்கமாத்திரயை சாப்பிட்டும் உடலில் மண்ணெண்ணெய ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top