பொய்கை அணைக்கு வரும் இளைஞர்கள் ஆபத்தான பகுதிக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொய்கை அணைக்கு வரும் இளைஞர்கள் ஆபத்தான பகுதிக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

in News / Local

ஆரல்வாய்மொழி-செண்பகராமன்புதூர் சாலையில் வடக்கு மலை அடிவாரத்தில் பொய்கை அணை அமைந்துள்ளது. 42 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு வடக்கு மலையில் உள்ள சுங்கான் ஒடை வழியாக தண்ணீர் வருகிறது. இந்த ஓடை செப்பனிடப்படாததால் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சுங்கான் ஓடை சீரமைக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் அதிகபட்சமாக 20 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனம் பெற்றது.
அதன்பின் மழை பெய்யாததால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால் தற்போது பொய்கை அணையில் சுமார் 7 அடி அளவே தண்ணீர் உள்ளது.

பொய்கை அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் இந்த அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, காவல் துறையினரோ கண்டுகொள்வதில்லை. ஆனால் கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் தண்ணீருக்காக அணை பக்கம் வந்து செல்கின்றன. இந்த நிலையில் ஆரல்வாய்மொழி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் கல் லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த பகுதிக்கு அடிக்கடி சுற்றுலா வருகின்றனர். இவர்கள் அணை பகுதியில் அமர்ந்து பேசிக்கொண் டிருப்பது, விளையாடுவது என பொழுதை கழிக்கின்றனர். மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் அவ்வப்போது காதலர்கள் இங கு வ ந்து மறைவான இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண் டிருக்கின்றனர். அது போல் கள்ளக்காதலர்களும் இங்கு அதிகளவில் வருகின்றனர்.

அணையின் நீர் மட் டம் குறைந்தாலும் மடை பகுதி சொகுசு அறை போன்று குளுகுளு சூழலில் காணப்படுகிறது. இதை தெரிந்து வைத்திருக்கும் காதலர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இங்கு நீண்ட நேரமாக அமர்ந்து இருக்கின்றனர். மேலும் மது விருந்து அளிக்கும் வாலிபர்களும் இங்கு அவ்வப்போது வந்து மது அருந்துகின்றனர்.போதை ஏறிய பின் அணையில் இறங்கி குளிப் பது, ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு வருபவர்கள் பலர் ஆபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் அணையில் இறங்கி குளித்த போது ஒரு மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.மேலும் பொய்கை அணை வடக்கு மலை அடி வாரத்தில் உள்ளதால் இந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட் டம் அதிகமாக உள்ளது. வனத்தில் வாழும் கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அணை பகுதிக்கு வருகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள பல விவசாயி கள் கரடியால் தாக்கப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும் ஆடுகள், கோழிகளை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளன, காற்றாலை பண்ணை ஊழியர்கள் சிறுத்தையை நேரில் பார்த்ததாக கூறுகின்றனர்.அணை பரப்பில் மது போதையில் அல்லது உற்சாக கொண்டாட்டத்தில் இருக்கிறவர்களுக்கு இந்த விலங்குகளாலும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இங்கிருக்கும் ஆபத்தை உணர்ந்த சமத்துவபுரம் பகுதி மக்கள் அவ்வப்போது, காதல் ஜோடிகளையும், மாணவ மாணவிகளையும் அழைத்து எச்சரித்து அனுப்புகின்றனர். என்றாலும் இளைஞர்களின் வருகை அதிகமாக உள்ளது.

ஆனால் அணையை பராமரிக்கும் பொதுப்ப ணித்துறை இது எதையும் கண்டுகொள்ளவில்லை. இங்கு ஏற்கனவே ஒரு காவலாளி பணியில் இருந்தார். ஆனால் சமீப காலமாக காவலாளிகள் யாரும் இருப்பதில்லை . என ேவ பொய்கை அணையில் போதுமான அளவு பாதுகாவலர்கள் நியமிக்க வேண் டும். அனுமதியில்லா பகுதிகளுக்கு இளைஞர்கள், காதல் ஜோடிகள் செல்வதை தடுக்க உரிய தடுப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top