கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக பேருந்துகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், அரசு அனுமதி அளித்ததையொட்டி, ஏற்கனவே முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்குவதற்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, இன்று முதல் தமிழகம் முழுவதும் வெளியூர்களுக்கு அரசு பேருந்துகள் மற்றும் விரைவு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து இன்று காலை திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால், வெளியூர் செல்வதற்காக பயணிகள் போதிய அளவில் வராததால் வெளியூர்களுக்கு புறப்படும் பேருந்துகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஒவ்வொரு பேருந்திலும் 10 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர். தொடர்ந்து, வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஓரிரு நாட்களுக்கு பின் கூடுதல் பயணிகள் வருகை தர வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறினர்.
0 Comments