விசாரணையில் பெண் சாவு, போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்ய கலெக்டரிடம் மனு!

விசாரணையில் பெண் சாவு, போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்ய கலெக்டரிடம் மனு!

in News / Local

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ரெட் ஸ்டார்) மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனு:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய கிறிஸ்டோபர் சிறுமியிடம் தவறாக நடந்ததாக வள்ளியூர் மகளிர் போலீசார் கிறிஸ்டோபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். தொடர்ந்து அவரை கண்காணித்த போது கருங்கல் அருகே அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் லீலாவதியுடன் பேசியது தெரிய வந்தது. அதன்படி கடந்த 17ம் தேதி லீலாவதியை அவரது வீட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லாத போது கைது செய்து நடத்திய விசாரணையின் போது அவர் இறந்துள்ளார்.

காவலர்கள் தாக்கியதால் தான் அவர் இறந்துள்ளார். எனவே மனித உரிமை ஆணையத்தின் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை வேறு ஒரு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும். லீலாவதி கிறிஸ்தவர். அவரை அடக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் ஒழுகினசேரி பகுதியில் உள்ள சுடுகாட்டில் காவலர்கள் இரவோடு இரவாக எரித்துள்ளனர். எனவே தமிழக அரசு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top