கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் என்ஜினீயர் தற்கொலை!

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் என்ஜினீயர் தற்கொலை!

in News / Local

தென்தாமரைகுளம் அருகில் உள்ள பூவியூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவருடைய மகள் மீனா (வயது 31). இவர் எம்.இ. படித்தவர். என்ஜினீயரான மீனாவுக்கும், வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் பகுதியை சேர்ந்தவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அதன்பிறகு கணவன்-மனைவி பிரிந்தனர்.

அதைத்தொடர்ந்து மீனா தனது,தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை மீனா வழக்கம் போல் காபி குடித்து விட்டு தனது படுக்கை அறைக்கு சென்றார். அதன்பிறகு வெகுநேரம் ஆகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மீனா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுபற்றி பாலச்சந்திரன் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top