கல்யாணம் ஆகி இரண்டே வாரத்தில் கர்ப்பம், அதிர்ந்த கணவன்.. டெஸ்ட்டுக்கு ரெடி என மனைவி சவால்!

கல்யாணம் ஆகி இரண்டே வாரத்தில் கர்ப்பம், அதிர்ந்த கணவன்.. டெஸ்ட்டுக்கு ரெடி என மனைவி சவால்!

in News / Local

"இந்த குழந்தைக்கு அவர்தான் அப்பா.. நான் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு ரெடி.." என்று பெண் ஒருவர் 40 நாள் கைக்குழந்தையுடன் கணவர் வீட்டு முன்பு தர்ணாவில் உட்கார்ந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டேறிபட்டியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு 30 வயதாகிறது.. என்ஜினியராக உள்ளார்.. இந்தோனேசியாவில் உள்ள பேக்ஸ் ஓசேன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இதே ஊரை சேர்ந்த தேன்மொழி என்பவருக்கும் போன பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் ஆனது.. 27 வயதான தேன்மொழியும் என்ஜினியர்தான்..

கல்யாணமாகி இருவரும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தனர். பின்னர் அடுத்த 15 நாட்களில் அதாவது மார்ச் 1-ம் வேலைக்காக முருகன் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்று விட்டார், இப்போதும் அங்குதான் உள்ளார். முருகன் வெளிநாடு சென்றுவிடவும், படித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க கூடாது என்று தேன்மொழியும் கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றார். வேலை நிமித்தமாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த சமயத்தில் தேன்மொழி கர்ப்பமானார்.. மார்ச்-8ம் தேதி கர்ப்பமாக இருப்பதாக ஆஸ்பத்திரியில் உறுதி செய்யப்படவும், இந்த விஷயத்தை போனில் முருகனுக்கு சொன்னார்.. பிறகு வேலையை விட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு வந்து விட்டார்.

தினமும் முருகனுடன் போனில் பேசி வந்தார். இதற்கிடையே, போன நவம்பரில் தேன்மொழிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த செய்தியை ஆசையாக முருகனுக்கு போன் பண்ணி சொன்னார்... "குழந்தையை பார்க்க லீவு எடுத்துட்டு வாங்க" என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், லீவு கிடைக்காது, அதனால் வரமுடியாது என்று முருகன் சொன்னார். இதனால் தேன்மொழி மனவருத்தத்தில் இருந்தார். ஒருநாள் முருகன், "இந்த குழந்தை எனக்கு பிறக்கல.." என்று திடுதிப்பென்று சொல்விட்டார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தேன்மொழி, பச்சிளம் குழந்தையை தூக்கி கொண்டு முருகன் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து விட்டார்.. திடீரென கைக்குழந்தையுடன் பெண், தர்ணாவில் உட்கார்ந்தது அந்த பகுதியில் வேகமாக பரவியது. தகவலறிந்த கடையம் போலீசார் தேன்மொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "இந்த குழந்தை அவருக்கு பிறக்கலன்னு சொல்றார்.. இது அவருக்கு பிறந்ததுதான்.. டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு நான் ரெடி.." என்றார். தேன்மொழி இப்படி சொன்னதும், "ஒரு மாதத்தில் முருகன் ஊருக்கு வரும்படி சொல்லி உள்ளோம்.. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சமாதானம் செய்தனர். இதற்கு பிறகு தேன்மொழி, அவர் அம்மா வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top