பேச்சிப்பாறை அருகே மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்!

பேச்சிப்பாறை அருகே மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்!

in News / Local

பேச்சிப்பாறை அருகே கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த பெண்ணை பலாத்காரம் செய்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பேச்சிப் பாறை அருகே பழங்குடியினர் கிராமமானதச்சமலை சின்னமூட்டுச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரம்யா (45) (பெயர் மாற் றம்). இவருக்கு 2 மகள்கள் உண்டு. அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட் டது. கணவனை இழந்த ரம்யா தனியாக வசித்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (50). அடிக்கடி ரம்யாவிடம் வம்பு இழுப்பது வழக்கமாம். மேலும் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரம்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த லட்சுமணன் நைசாக ரம்யா வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் லட்சுமணன் கையில் தயாராக வைத்திருந்த போதையூட்டும் திரவத்தை ரம்யாவுக்கு வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார். அதை குடித்த ரம்யா சிறிது நேரத்தில் மயங்கி உள்ளார். அப்போது ரம்யாவை லட் சுமணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரம் கழித்து ரம்யா மயக்கம் தெளிந்து பார்த்தார். அப்போது தான் சீரழிக்கப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களிடம் தனக்கு நடந்த கொடுமை குறித்து ரம்யா தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top