கன்னியாகுமரியில் தீ குளித்த பெண் சாவு!

கன்னியாகுமரியில் தீ குளித்த பெண் சாவு!

in News / Local

கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி டயானா (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தம்பதிக்கு கடன் பிரச்னை இருந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் கணவன் மீது டயானா புகார் செய்தார்.

போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்தனர். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற டயானா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்துள்ளார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் டயானா நேற்று காலை இறந்தார். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top