காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரிய இளம்பெண்ணை; பெற்றோருடன் அனுப்ப முயற்சித்த போலீஸ்!

காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரிய இளம்பெண்ணை; பெற்றோருடன் அனுப்ப முயற்சித்த போலீஸ்!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரிய இளம்பெண்ணை, பெற்றோருக்கு ஆதரவாக போலீசார் குண்டுக்கட்டாக காரில் ஏற்றி அனுப்பி வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்தூர் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியான விஜயராஜூம், எம்.பி.ஏ பட்டதாரியான டயானாவும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு டயானாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக பதிவு திருமணம் செய்துகொண்டு, அவரவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் டயானாவின் தந்தைக்கு இது தெரியவர, அவரை வீட்டிலேயே சிறை வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது மகளை திருமணம் செய்து கொண்டதாக போலி ஆவணங்களை வைத்து விஜயராஜ் மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பான விசாரணைக்காக காதல் ஜோடிகள் இருவரும் காவல் நிலையம் வருமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். காவல் நிலையம் வந்த டயானா, தான் மேஜர் என்பதால் விஜயராஜுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால் சார் ஆய்வாளர் ஹேமலதா மற்றும் தலைமை காவலர் சுதா ராணி டயானாவை தனியாக அழைத்து சென்று பெற்றோருடன் செல்லுமாறு கட்டாயபடுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், டயானாவை பெற்றோருடன் சேர்ந்து குண்டுகட்டாக காரில் ஏற்றி அனுப்பி வைக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக காவல் நிலையம் வாயில் முன்பாக பொதுமக்கள் திரண்டனர். பின்னர் சுதாரித்துக்கொண்ட போலீசார், டயானா விருப்பத்தின்படி காதலர் விஜயராஜ் உடன் செல்ல அனுமதித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top