திருவனந்தபுரத்தில் பிளஸ் 1 மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

திருவனந்தபுரத்தில் பிளஸ் 1 மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

in News / Local

திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியை சேர்ந்தவர் சுல்பிகர்(49). இவர் சம்பவத்தன்று பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பிளஸ் 1 மாணவர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். உடனே அந்த மாணவனை சுல்பிகர்பைக்கில் ஏற்றிக் கொண்டார். பின்னர் அந்த மாணவனிடம், சுல்பிகர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை தெரிந்து கொண்ட மாணவன் கூச்சலிட்டார்.

ஆனாலும் சுல்பிகர் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை. இதை பின்னால் பைக்குகளில் வந்த வாலிபர்கள் கவனித்தனர். அவர்கள் சுல்பிகரை விரட்டி சென்று பைக்கை நிறுத்துமாறு கூறினர். ஆனால் அவர் நிற்காமல் வேகமாக சென்றறு ஓரிடத்தில் மாணவனை இறக்கி விட்டு விட்டு வேகமாக தப்பி சென்றார்.
இதற்கிடையே பின்னால் துரத்தி வந்த வாலிபர்கள் சுல்பிகரை மடக்கி பிடித்து அவரை நையப்புடைத்தனர். அதை தொடர்ந்து அவரை ஸ்ரீகாரியம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் சுல்பிகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top