நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் பெண்ணிடம் திருடிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை விரட்டி சென்று பிடித்த போக்குவரத்துக்கு காவலர்!

நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் பெண்ணிடம் திருடிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை விரட்டி சென்று பிடித்த போக்குவரத்துக்கு காவலர்!

in News / Local

நாகர்கோயில், வேப்பமூடு சந்திப்பு அருகே நேற்று காலை 11 மணியளவில், பெண் ஒருவரிடம் இருந்து மொபைல் மற்றும் இதர பொருட்களை திருடி விட்டு எஸ்பி ஆபிஸ் ரோடு வழியாக தப்பி ஓட முயன்ற வாலிபரை அங்கு வாகனங்கள் சீர் செய்வதற்காக பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக்கு காவலர் மணிகண்டன், தன்னந்தனியாக துரிதமாக செயல்பட்டு விரைந்து சென்று யாருடைய துணையுமின்றி அந்த திருடனை எஸ்பி ஆபிஸ் அருகே விரட்டி சென்று மடக்கி பிடித்தார்

அதன் பின் திருடனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டு, திருடன் கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

மக்கள் அதிகமாக நடமாடும் சாலையில், அதுவும் பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்டு திருடனை சாமர்த்தியமாக மடக்கி பிடித்த காவலர் மணிகண்டனுக்கு மக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top