அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ் - மீண்டும் தனது நடிப்பினால் மிரட்டியுள்ளார் அமலா பால்!

அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ் - மீண்டும் தனது நடிப்பினால் மிரட்டியுள்ளார் அமலா பால்!

in Entertainment / Movies

ஆடை படத்தை தொடர்ந்து அமலா பாலின் மிரட்டல் நடிப்பில் அதோ அந்த பறவை படம் உருவாகியுள்ளது. தற்போது அந்த படத்தின் டீசரை மோகன் லால் மற்றும் அனிருத் வெளியிட்டனர். காடுகளை சுற்றி நடக்கும் கதையாக அமலா பாலின் அதோ அந்த பறவை போல வெளியாகியுள்ளது. வினோத் கே.ஆர். இயக்கியுள்ள இந்த படத்தில் அமலா பாலுடன் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சமீர் கோச்சார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆடை ரத்னகுமார் இயக்கத்தில் பொதுமக்களிடம் பிரான்க் செய்யக் கூடாது என்ற நல்ல கருத்தை உள்ளடக்கி வெளியான அமலா பாலின் ஆடை படம் விமர்சகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது, இந்த படத்தில் நடித்த அமலா பாலுக்கு கிடைக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆடையின்றி அமலா பால் நடித்ததை இந்தியளவில் பல சினிமா பிரபலங்களும் வாய் பிளந்து பாராட்டினர். நெட்பிளிக்ஸ் ஆடை படத்தில் நடித்த அமலா பால், தெலுங்கில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரிஸ் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் கியாரா அத்வானி நடித்த கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனிருத் மோகன் லால் அமலா பால் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள அதோ அந்த பறவை போல டீசரை சற்றுமுன் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் மற்றும் தமிழகத்தின் ராக்ஸ்டார் அனிருத் ஆகியோர் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

வினோத் கே.ஆர். இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல டீசர் 1 நிமிடம் 26 நொடிகள் மிகவும் க்ரிப்பாக பல ஆக்‌ஷன் காட்சிகளுடன் நகர்கிறது. ஆடை படத்தை போன்றே இந்த படமும் மிகவும் விறுவிறுப்பாக, மக்களிடையே ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. ஆடை படத்தை போன்றே இந்த படத்திலும் மிரட்டியுளார் அமலா பால் என்று தான் சொல்ல வேண்டும்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top