ஆதித்ய வர்மா இன்று ரிலீஸ் விக்ரம் மகனுக்கு குவியும் ரசிகர்கள்!

ஆதித்ய வர்மா இன்று ரிலீஸ் விக்ரம் மகனுக்கு குவியும் ரசிகர்கள்!

in Entertainment / Movies

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் நடித்துள்ள அறிமுக படமான ஆதித்ய வர்மா பல பிரச்சனைகளுக்கு பின்னர் இன்று ரிலீசாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர் சியான் விக்ரம். சேது படத்தின் மூலம் மிகப்பெரிய நடிகராக வலம் வந்து இன்றும் தனது இடத்தை தனது திறமையான நடிப்பினால் தக்க வைத்து கொண்டவர். இவரது மகன் த்ருவ் விக்ரம் இந்தியளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இன்று பட ரிலீசின் போது நடிகர் விக்ரம் படத்திற்கு எப்படியொரு ஓபனிங் இருக்குமோ அதே அளவுக்கு த்ருவ் விக்ரமுக்கும் ஓபனிங்க் கிடைத்துள்ளது. பட ட்டிரைலர் வெளியானதில் இருந்தே த்ருவ் விக்ரமிற்கு ரசிகர்கள் குவிந்து வந்த நிலையில், தற்போது திரையில் ரசிகர்கள் குவிந்திருப்பது த்ருவ்க்கு சினிமாவில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பு என்றே கூறலாம்.

அதுமட்டுமன்றில், விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் த்ருவ் விக்ரமின் அறிமுக படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து ட்விட்டரில் ஆதித்ய வர்மா, த்ருவ் விக்ரம் ஆகிய ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top