திரையுலகின் மிக உயரிய விருதை பெற்றார் அமிதாப் பச்சன்!

திரையுலகின் மிக உயரிய விருதை பெற்றார் அமிதாப் பச்சன்!

in Entertainment / Movies

66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ந் தேதி டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். கடுமையான காய்ச்சல் காரணமாக அந்த சமயத்தில் அமிதாப் பச்சன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியவில்லை.

இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், அமிதாப் பச்சனுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இந்த விழாவில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிகப்பெரும் விருதான தாதா சாகேப் பால்கே விருது, ஒரு தங்க தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கியதாகும்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top