பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக நடிகர், இயக்குனர் கே. பாக்யராஜ், மாநில மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார்.
இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பாக்யராஜ் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்தும், ஆண், பெண் கள்ளக்காதல் தொடர்பாகவும் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பொதுமக்கள் பலரும், மகளிர் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து டிசம்பர் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, தமிழ்நாடு மகளிர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அன்றைய தினம் படப்பிடிப்பு இருப்பதால், டிசம்பர் 16ம் தேதி ஆஜராக பாக்யராஜ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், 16ம் தேதியான இன்று சேப்பாக்கம் கலச மஹாலில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில், அதன் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் முன்பு நடிகர் பாக்யராஜ் ஆஜராகி விளக்கமளித்தார்..
0 Comments