தர்பார் படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தர்பார் படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

in Entertainment / Movies

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்படும் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், தர்பார் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், “2.0 படத்திற்காக லைகா நிறுவனம் ரூ.12 கோடியை ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டிக்கு கடனாக பெற்றது. ஆனால் இதுவரை பணம் திரும்பி தரவில்லை. .வட்டியுடன் சேர்த்து ரூ.23.70 கோடி வழங்கும் வரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கிற்கு, ஜனவரி 2 ஆம் தேதி லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top