குழந்தைகள் ஆபாச தளங்களை தடுக்க சி.பி.ஐ தனிப்பிரிவு!

குழந்தைகள் ஆபாச தளங்களை தடுக்க சி.பி.ஐ தனிப்பிரிவு!

in Entertainment / Movies

ஆன்லைன் மூலமான குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுத்தல் மற்றும் விசாரணைக்காக சி.பி.ஐ.யில் தனிப்பிரிவு ஓன்று அமைக்கப்பட்டு உள்ளது. சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரிவினர் குழந்தைகள் ஆபாச தளங்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு குற்றப்புலனாய்வு துறையின் கீழ் இயங்கும் இந்த சிறப்பு பிரிவினர், குழந்தைகள் ஆபாச தளங்களை உருவாக்குவோர் மற்றும் பகிர்வோரை மட்டுமின்றி, அந்த தளங்களை பார்ப்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்களையும் விசாரிப்பார்கள்.

இந்த தளங்களை பயன்படுத்துவோர் மீது இந்திய தண்டனை சட்டம், குழந்தை பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் தகுந்த பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top