நடிகை மோனல் மரணத்தில் சர்ச்சை!

நடிகை மோனல் மரணத்தில் சர்ச்சை!

in Entertainment / Movies

தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவரது தங்கை மோனல், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த "பார்வை ஒன்றே போதுமே" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் மிகக்குறைந்த திரைப்படங்களில் மட்டுமே நடித்த நடிகை மோனல் யாருமே எதிர்பாராத விதமாக திடீரென்று கடந்த 2002ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து நடிகை மோனல் நடிகர் குணாலை காதலித்து வந்ததாகவும் அவரால்தான் நடிகை மோனல் தற்கொலை செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவின...

ஆனால் தற்போது நடிகை மோனல் குணாலை காதலிக்கவில்லை என்றும் அவர் நடன இயக்குனர் கலா மாஸ்டரின் தம்பியான பிரசன்னாவை காதலித்து வந்தார் என்றும் தகவல் வெளியானது. இவர்களின் காதலை கலா மாஸ்டரின் வீட்டார் ஏற்றுக் கொள்ளாததால் பிரசன்னா, மோனலின் காதலை முறித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நடிகை மோனல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிம்ரன் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. மோனல் தற்கொலை செய்துகொண்ட விஷயத்தை அறிந்ததும் கலா மாஸ்டரின் பேச்சைக் கேட்டு மும்தாஜ் மோனலின் இல்லத்திற்கு சென்று தடயங்கள் சிலவற்றை அழித்து விட்டதாகவும் நடிகை சிம்ரன் போலீசாரிடம் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நடிகர் ரியாஸ் மற்றும் மும்தாஜ் ஆகியோர் இணைந்து கோடம்பாக்கத்தில் உள்ள மோனலின் இல்லத்திற்கு சென்று 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது டைரி ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்திருக்கிறார். பின்னர் செல்போன் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு பேசிய போது மோனல் இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு நடிகர் ரியாஸ் இடம் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோனல் வீட்டில் இருந்து ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இதனை காவல்துறையினர் அளிக்க உள்ளதாக நடிகை சிம்ரன் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மோனல் தற்கொலை வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துப்புதுலக்க தயாராகி வருகிறது தமிழக காவல்துறை.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top