தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கதையை வைத்து படம் மற்றும் வெப்சீரிஸ் எடுக்கும் 3 இயக்குநர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவரது வாழ்க்கை வராலாற்றை வைத்து படம் மற்றும் வெப்சீரிஸ் எடுக்க பல இயக்குநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தன்னுடைய அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் கதையை வைத்து படம் மற்றும் வெப்சீரிஸ் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெ கதையை வைத்து படம், வெப்சீரிஸ் எடுக்கும் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
0 Comments