சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ளது தர்பார். பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கதாநாயகியாக நன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் கெட்டப்பில் வரும் ரஜினியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த படம் தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுதக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, பொங்கலுக்கு முன்னதாகவே ஜனவரி 9-ந்தேதியே தர்பார் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பொங்கலுக்கு முன்பும் பின்பும் 2 வாரங்கள் தொடர்ச்சியாக நல்ல வசூல் பார்க்க முடியும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
0 Comments