சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்காலத் தடை!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்காலத் தடை!

in Entertainment / Movies

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற நடுவர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

24 பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தை டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இதனிடையே 24 பிலிம்சின் பங்குதாரர்களான ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகியோர் டி,எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு 10 கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும், இதுவரை வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், 24 பிலிம்ஸ் தயாரித்து வரும் படத்தை கே.ஜி.ஆர் பிலிம் நிறுவனத்தின் மூலம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாயை 24 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் டி,எஸ் ஆர் பிலிம்ஸ் சார்பில் வழங்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹீரோ படத்தை வேறு தலைப்பில் வெளியிடவும், வேறு நிறுவனங்களின் பெயரில் வெளியிடவும் இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணை டிசம்பர் 2 ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top