இந்திய கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டேவுக்கும், பிரபல நடிகை அஷ்ரிதா ஷெட்டிக்கும் திருமணம் நடைபெற்று, திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனீஷ் பாண்டேவும், நடிகை அஷ்ரிதா ஷெட்டியும் காதலித்து வருவதாக செய்திகள் வந்தன. நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, அது தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
தங்களின் காதலை ரகசியமாக வைத்துக்கொண்ட இவர்கள், சமீபத்தில் திருமணத்தையும் மும்பையில் ரகசியமாக நடத்தி முடித்துள்ளனர். திருமண புகைப்படம் வெளியான பிறகே, இவர்களின் திருமணம் பற்றிய செய்தி வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது. திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.
அஷ்ரிதா ஷெட்டி தமிழில் உதயம் என்.எச்.4, ஒரு கண்ணியும் மூணு களவாணிகளும், இந்திரஜித் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments