வலிமை படத்தில் நஸ்ரியா?.

வலிமை படத்தில் நஸ்ரியா?.

in Entertainment / Movies

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயர் இடப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.

இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல். மேலும் இந்த படத்தில், மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன.

வில்லனாக நடிக்க அருண் விஜய் பரிசீலனையில் உள்ளார். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் நஸ்ரியா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் அவர் தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தற்போது தலைமுடியை குட்டையாக வெட்டி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில் வலிமை என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார். இதன் மூலம் அஜித் படத்தில் அவர் நடிக்கிறார் என்று வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top