விஜய்யின் குருவி படத்தில் அறிமுகமான நிவேதா தாமஸ் ‘நவீன சரஸ்வதி’ படத்தில் கதாநாயகி ஆனார். விஜய்யின் ஜில்லா, கமல்ஹாசனின் பாபநாசம் மற்றும் போராளி ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார். தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் ஜூனியர் என்.டி.ஆர், நானி, பிகாட் பாசில், குஞ்சாகோ போபன் போன்ற பல முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்து உளார் . தற்போது ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
இதில் ரஜினியின் மகளாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிவேதா தாமஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். சில ரசிகர்கள் அவரிடம் மிகவும் மோசமான கேள்விகளை எழுப்பியுள்ளனர்..
உங்கள் திருமணம் எப்போது? ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா? கன்னித் தன்மையோடு இருக்கிறீர்களா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டனர். அதில் சில கேள்விகள் ஆபாசமாகவும், மிகவும் மோசமாகவும் இருந்தன. இதனால் அதிர்ச்சியான நிவேதா தாமஸ் அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் அறிவுரை வழங்கினார்.
அவர் கூறும்போது, “எனக்காக நேரம் ஒதுக்கி பேசியவர்களுக்கு நன்றி. உங்கள் நகைச்சுவையான கேள்விகளுக்கு பதில் அளிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சில மோசமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நிராகரித்து விட்டேன். நீங்கள் சக மனிதருடன் உரையாடுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். மரியாதையாகவும் கண்ணியமாகவும் பேசுங்கள்” என்றார்.
0 Comments