பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாக்கியராஜிடம் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத்திற்கு ஆந்திரா மகளிர் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற "கருத்துக்களை பதிவு செய்" என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநரும், நடிகருமான கே.பாக்கியராஜ் பாலியல் பிரச்சனைகளுக்கு பெண்கள் தான் காரணம் என்ற கருத்தை கூறினார். மேலும், ஆண் தவறான நடத்தையுடன் இருந்தாலும், முதல் மனைவிக்கு குறைவைப்பதில்லை. ஆனால், வேறு ஆண்களுடன் செல்லும் பெண்கள் குழந்தைகளையும், கணவனையும் கொலை செய்ய துணிவதை செய்திதாள்களில் பார்க்கிறோம். பொள்ளாச்சி விவகாரத்திலும் பாலியல் பிரச்சனைக்கு பெண்களே காரணம் என்றும், அவர்கள் இடம் கொடுத்திருக்காவிட்டால் இப்படி ஒரு பிரச்சனையே நடந்திருக்காது என்றும் பேசினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பேசியது குறித்து இயக்குநர் பாக்கியராஜிடம் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத்திற்கு ஆந்திரா மகளிர் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments