வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம், தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலை.

வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம், தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலை.

in Entertainment / Movies

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு வரும் 28ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க உள்ளார்.

இந்நிலையில், வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சின்மயி, பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில், 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம். நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கௌரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி ஆளுமைத்திறனுக்காக வழங்கப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் தரலாம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க.. வெல்டன் தனியார் பல்கலைக்கழகம்" என கடுமையாக பதிவிட்டுள்ள சின்மயி, வைரமுத்து இந்த ஒரு வருடத்தில் அரசியல் மற்றும் கலைதுறை பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும் இல்லை. நல்ல நாடு.. நல்ல மக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இவரது, ட்விட்டர் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலரும் கருத்து பதிவிட்டுள்ளதோடு, சின்மயி புகார் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top