மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது.
அமரர் கல்கியின் வரலாற்றுப் புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறார். இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி, லொகேஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்த மாதம் டிசம்பர் 12ஆம் தேதி தாய்லாந்தில் துவங்கவுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்களாக நடைபெறவுள்ளது. ஏற்கனவே மணிரத்னம் தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காடுகளில் படப்பிடிப்புக்கான லொகேஷன்களை பார்வையிட்டு தேர்வு செய்துள்ள நிலையில், படத்தின் முதல் கட்டப் பணி தாய்லாந்து காடுகளில் துவங்கவுள்ளது. மேலும், படக்குழு டிசம்பர் முதல் வாரமே தாய்லாந்து செல்லவுள்ளது.
அமிதாப் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், ஜெயராம், அமலா பால், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆகியோர் பொன்னியின் செல்வனில் நடிக்கவுள்ளனர். முக்கியமாக பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளடாக தெரிகிறது.. வைரமுத்து வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படத்திற்காக 12 பாடல்கள் உருவாகவுள்ளது. மணிரத்னம், சிவா ஆனந்த், நடிகர் இளங்கோ குமாரவேல் ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்கள். ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ளவுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
0 Comments