தனது சொத்திலிருந்து 5000 கோடியை ஏழை மக்களுக்கு தானம் செய்த பிரபல நடிகர்

தனது சொத்திலிருந்து 5000 கோடியை ஏழை மக்களுக்கு தானம் செய்த பிரபல நடிகர்

in Entertainment / Movies

ஹாங் காங்கை சேர்ந்த பிரபல நடிகர் சவ் யுன் பெட், தனது சொத்துக்கள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு, பில்கேட்ஸ் மற்றும் வாரன் பப்பட் இவர்களால் துவங்கப்பட்டது தான் The Giving Pledge. இந்த அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தங்களது சொத்துக்களை தானமாக வழங்கி வருகின்றனர். இதுவரை இந்த அமைப்பில்,186 செல்வந்தர்கள் இணைந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார் பிரபல நடிகரான சவ் யுன் பேட்.

இது குறித்து அவர் தெரிவிக்கும் பொது, "நாம் இறக்கும் போது எதையும் கொண்டு செல்ல போவதில்லை. இதுவரை நான் பிறருக்காக வாழ்ந்ததும் இல்லை, என்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த ஆடையை அணிந்ததும் இல்லை. நம் உயிர் நம்மை விட்டு பிரிந்த பின் நம் உடமைகள் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும்.எனவே தான், நான் இறந்தபிறகு என்னுடைய சொத்திலிருந்து ஐந்தாயிரம் கோடியை ஏழை எளிய மக்களுக்காக எடுத்துக்கொள்ளலாம் என இந்த அமைப்புடன் கையொப்பம் இட்டு உள்ளேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

இவர் நடித்த படங்களில் கிரௌசிங் டைகர் ஹிட்டன் டிராகன், ஒன்ஸ் எ தீப் (ஒன்ஸ் எ தியப்) உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க உலக பணக்கார பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகையில் கூட இவருடைய பெயர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம் பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு தான் பணம் சேர்த்தாலும் திருப்தி அடையாமல், பணத்திற்கு பின்னால் ஓடும் இந்த உலகத்தில். நடிகர் சவ் யுன்பெட்டேவின் இந்த தாராள செயல் அனைவரின் பாராட்டை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top