கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் திவானி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளவர் கல்கி கோச்சலின். இவர் தமிழில் அஜித்குமாரின் நேர் கொண்ட பார்வை படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இவர் நடித்த மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா படத்தில் இவரது நடிப்பு திறமையை பலரும் பாராட்டி இருந்தனர்.
இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப்பை காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார்.தற்போது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஹெல்ஸ்பர்க் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். கல்கி கோச்சலின் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் நடிகையாக பல வேதனைகளை சந்தித்து இருக்கிறேன். இந்தியில் தேவ் டி படம் வெளியானபோது என்னை விலைமாது என்று அழைத்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஹாலிவுட் படங்களிலும் இதே பிரச்சினையை சந்தித்தேன். என்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். தனியாக வெளியே அழைத்து செல்லவும் முயற்சித்தார்.
அதற்கு நான் மறுத்து விட்டேன். இதனால் அவருடைய படத்தில் இருந்தே என்னை நீக்கி விட்டார். நான் நடித்த ஏ ஜவானி ஹாய் திவானி படம் வெற்றி படமாக அமைந்தது. ஆனாலும் யாரும் வாய்ப்பு தரவில்லை.”
இவ்வாறு கல்கி கோச்சலின் கூறினார்.
0 Comments