அடிக்கடி போதையில் விபத்து.. பிரபல நடிகரின் லைசென்ஸை நிரந்தரமாக ரத்து!

அடிக்கடி போதையில் விபத்து.. பிரபல நடிகரின் லைசென்ஸை நிரந்தரமாக ரத்து!

in Entertainment / Movies

தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருபவர் நடிகர் ராஜசேகர். நடிப்பதோடு மட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி கட்சித் தாவுவதை வழக்கமாக கொண்டிருக்கும் ராஜசேகர் தற்போது ஆளும் ஒய்.எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார்.

அடிக்கடி ஏதாவது பேசிவிட்டு சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம். ஆனால் தற்போது குடிபோதையில் வண்டியை ஓட்டி விபத்தை ஏறபடுத்தியல் அவரது ஓட்டுனர் உரிமத்தை நிரந்தரமாக போக்குவரத்து காவல்துறை ரத்து செய்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது மனைவியுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த ராஜசேகர் அதிவேகமாக வண்டியை இயக்கி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில் நடிகர் ராஜசேகர் குடித்து விட்டு காரை இயக்கியதால் தான் இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. மேலும் இந்த விபத்தோடு சேர்த்து இவர் ஏற்கனவே 22 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும், நகரங்களுக்குள் அதிவேகமாக காரை இயக்கியதாலும் அவரது உரிமத்தை தெலுங்கானா போக்குவரத்து காவல்துறை நிரந்தரமாக ரத்து செய்துள்ளது. ஆளுங்கட்சி பிரமுகர், பிரபலமான நடிகர் என பன்முகங்களை கொண்டிருந்தாலும் அரசு இந்த விஷயத்தில் தலையிடாமல் இருப்பது அரசியல் களத்தில் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top