கேரளாவின் இளமையான ஹீரோ ஷேன் நிகம். இவர் இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்திருந்தார் ஷேன், வெயில் மற்றும் குர்பானி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போது வெயில் படத்திற்காக தலைமுடியை அதிகமாக வளர்க்கப்பட்டது. படப்பிடிப்பு முடியும் வரை ஹேர்ஸ்டைலை மாற்றக் கூடாது என்று இயக்குநர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் தனது ஹேர்ஸ்டைலை வெட்டி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் நிகம். எனவே, இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் ஆகியோர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தனர். இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டு படம் முடியும் வரை கெட்டப்பை மாற்றக் கூடாது என நிபந்தனையை ஏற்றுக்கொண்டார் நிகம்.
இந்நிலையில் மறுபடியும் கடந்த சில நாட்களுக்கு முன், தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்த உறுதியை மீறி, , தலைமுடியை, மண்டையின் இரண்டு பக்கமும் நன்றாக ஷேவ் செய்து திருத்தப்பட்ட புதிய கெட்டப்பை வலைத்தளத்தில் வெளியிட்டார் நிகம். இதனால் தயாரிப்பாளர் ஜார்ஜ் மீண்டும் சங்கத்தில் புகார் அளிக்க அதை விசாரித்த சங்க நிர்வாகிகள், முன்னிலையில் ஷேன் நிகமுக்குத் தடைவிதிக்கப்பட்டது.மேலும் அவர் நடித்த வெயில்,குர்பானி படங்கள் கைவிடப் படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் திருப்தித் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, கேரள கலாசாரத்துறை அமைச்சர் ஏ.கே.பாலனை சந்தித்துப் பேசினார் ஷேன் நிகம். சந்திப்புக்குப் பின் பேசிய ஷேன் நிகம், தயாரிப்பாளர்களைத் திட்டி பேட்டியளித்தார். இதனால் வெறுப்பான கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் இங்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, எப்படி அமைச்சரை சந்திக்கலாம்? இது பேச்சுவார்த்தையை திசைத்திருப்பும் முயற்சி, தடை தொடரும் எனவும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
0 Comments