பிரேம்ஜியுடன் இணைந்து நடிக்கும் பிக் பாஸ் ரேஷ்மா, சித்தா!

பிரேம்ஜியுடன் இணைந்து நடிக்கும் பிக் பாஸ் ரேஷ்மா, சித்தா!

in Entertainment / Movies

பிரேம்ஜி கதாநாயகனாக நடித்துவரும் அடுத்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபுவின் சகோதரரும், பிரபல காமெடி நடிகரும், பாடகருமான பிரேம்ஜி ஏற்கனவே மாங்கா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பல திரைப்படங்களில் காமெடிக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர் பெயர் சூட்டப்படாத மற்றொரு திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இந்தத் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

இந்தப் படத்தில் பிரேம்ஜியுடன் இணைந்து பிக் பாஸ் ரேஷ்மா மற்றும் சித்தா போன்றோர் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரியான நடிகை ரேஷ்மா, ‘வேலைன்னு வந்திட்டா வெள்ளக்காரன்’ திரைப்படத்தின் புஷ்பா, கதாபாத்திரத்தின் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். அது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்ததோடு பல ரசிகர்களையும் பெற்றுத்தந்தது. ரேஷ்மா பசுபுலேட்டி பிரேம்ஜியுடன் இணைந்து இந்தப்படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஆட்டோ ஷங்கர் வெப் சீரிஸில் நடித்திருந்த நடிகை ஸ்வயம் சித்தாவும் இந்தப்படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் அவர் பகிர்ந்துள்ளார்.

சூப்பர் டாக்கீஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சமீர் பரத் ராம் இந்தப்படத்தைத் தயாரித்துவருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top