தமிழ் சினிமாவில் தனது குணச்சித்திர நடிப்பால் கடந்த 2 தலைமுறை ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஒருவர், தான் ஏன் இந்து மதத்திலிருந்து இஸ்லாமைத் தழுவினேன் என்றும், உண்மையில் நாங்கள் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறி முகப்புத்தகத்தில் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்தியா முழுமைக்கும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் சித்தார்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் போன்றோர் மதிய அரசின் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 68 வயதில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரன் தன்னுடைய முகப்புத்தக பதிவில் இவர்கள் என்னவோ இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் இருந்து வந்தவர்களைப் போலவும், பாக்கிஸ்தானுக்கு இஸ்லாமியர்கள் செல்ல வேண்டும் என்பது போலவும் ஒரு பிரம்மையை ஏற்படுத்தி வருகின்றனர்.
உண்மையில் இந்துத்துவாவின் கொடுமையைத் தாங்க முடியாமல் தான் நாங்கள் மதம் மாறினோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். என்னுடைய அப்பாவிற்கு பிறகு தான் நாங்கள் இஸ்லாத்தை தழுவினோம் என ராஜ்கிரண் பதிவிட்டிருந்திருந்தார்.
ராஜ்கிரணின் பதிவு இளைஞர்களால் கவரப்பட்டு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
0 Comments