அதிரடி ஆக்‌ஷன் படத்தில் நாயகியாக சாக்‌ஷி அகர்வால்!

அதிரடி ஆக்‌ஷன் படத்தில் நாயகியாக சாக்‌ஷி அகர்வால்!

in Entertainment / Movies

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் திரையுலக வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சாக்சி அகர்வால், ஆர்யாவின் டெடி உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சாக்சி அகர்வால் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.

இந்த நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க சாக்சி அகர்வால் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் சத்யா கூறியபோது, சாக்சியை நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பார்த்தேன். அவருடைய எனர்ஜி வேற லெவலில் இருந்தது. சரியான நேரத்தில் அவர் ஒரு பிரச்சனையில் தலையிட்டு அந்த பிரச்சினையை முடிக்க தைரியமாக முடிவெடுத்தார். அவரது அந்த திறமை தான் என்னை மிகவும் கவர்ந்தது.

அவர் உடலளவிலும் மனதளவிலும் மிகுந்த பலத்துடன் இருப்பதால் அவர் எனது படத்தின் நாயகி கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளேன். இந்த படத்தில் அவருக்கு அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதால் அவர் தற்போது பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் பயிற்சி பெற்று வருகிறார் என்று கூறினார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து சாக்சி கூறும்போது இந்த படத்தில் நான் ஒரு பத்திரிகையாளராக நடிக்கிறேன். இது ஒரு பழிவாங்கும் கதை. இதில் எனக்கு 6 அல்லது 7 ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. முதலில் இந்த கேரக்டரில் நடிக்க என்னால் முடியுமா என்று நான் சற்று தயங்கினேன். ஆனால் இயக்குனர் கொடுத்த தைரியம் காரணமாக தற்போது இந்த படத்திற்காக நான் தயாராகி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் கர்நாடக மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top